×

போதைப்பொருட்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது : மக்கள் நல்வாழ்வுத்துறை

சென்னை : போதைப்பொருட்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், “போதை பழக்கவழக்கங்களை ஏற்படுத்தும் மருந்துகளின் விற்பனை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அடிமை பழக்கவழக்கங்களை ஏற்படுத்தும் மருந்துகளை விற்பனை தொடர்பாக, 2023 ஏப்ரல் 1 முதல்
2024 மே 31 வரை 505 வழக்குகள், பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிக்கோட்டினை சேர்மானமாக கொண்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது 2023 ஏப்ரல் முதல் 2024 மே வரை, 13,612 குற்றங்கள் பதிவு. ₹19.68 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post போதைப்பொருட்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது : மக்கள் நல்வாழ்வுத்துறை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Department of Public Welfare ,Welfare ,Dinakaran ,
× RELATED அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும்...