×

தமிழ்நாட்டில் கொட்டித்தீர்த்த கனமழை: பொதுப்பணித் துறை பராமரிப்பில் உள்ள 8,439 பாசன ஏரிகள் நிரம்பின…!!!

சென்னை: தமிழ்நாட்டில் பொதுப்பணித் துறை பராமரிப்பில் மொத்தமுள்ள 14,138 ஏரிகளில் இதுவரை 8,439 ஏரிகள் நிரம்பியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் அணைகள், நீர்த்தேக்கங்கள், பாசன ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள  தகவல்படி, *  தமிழ்நாட்டில் 3,382 ஏரிகள் முழு கொள்ளளவில் 76 சதவீதம்  முதல் 99 சதவீதம் வரை நீர் நிரம்பியுள்ளது. *  1,288 ஏரிகள் கொள்ளளவில் 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை நீர் நிரம்பி வருகின்றது.*  கன்னியாகுமரி  மாவட்டத்தில் மொத்தமுள்ள 2,040 பாசன ஏரிகளில் இதுவரை 570 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளது. * சிவகங்கை மாவட்டத்தில் 1,460 ஏரிகளில் இதுவரை 527 ஏரிகள் முழு கொள்ளளவுடன் 100 சதவீதம்  நிரம்பியுள்ளது.    மதுரை மாவட்டம் :  741 ஏரிகள் நிரம்பின * மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,340 பாசன ஏரிகளில் இதுவரை 741 ஏரிகள் 100 சதவீதம்  நிரம்பியுள்ளது.* புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,131 பாசன ஏரிகளில் இதுவரை 624 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளது.* செங்கல்பட்டு: 556 ஏரிகள் நிரம்பின* திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 697 பாசன ஏரிகளில் அதிகபட்சமாக 691 ஏரிகள் 100 சதவீதம்  நிரம்பியுள்ளது.அரியலூர் 56, சென்னை 26, செங்கல்பட்டு 566, கோவை 17, கடலூர் 194, தருமபுரி 12, காஞ்சி 104 ஏரிகள் நிரம்பியது.தஞ்சை மாவட்டம் : 458 ஏரிகள் நிரம்பின * கள்ளக்குறிச்சி 335, பெரம்பலூர் 73, ராமநாதபுரம் 218, ராணிப்பேட்டை 319, சேலம் 78, தஞ்சை 458 ஈர்கள் நிரம்பியது….

The post தமிழ்நாட்டில் கொட்டித்தீர்த்த கனமழை: பொதுப்பணித் துறை பராமரிப்பில் உள்ள 8,439 பாசன ஏரிகள் நிரம்பின…!!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Public Works Department ,CHENNAI ,Northeast Monsoon ,Tamil Nadu… ,
× RELATED நீர் கசிவை தடுக்கும் வகையில் பூண்டி...