×

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் சுற்றிதிரிந்த சிறுவன் மீட்பு

தஞ்சாவூர், ஜூன் 28: தஞ்சை ரயில் நிலையத்தில் வீட்டில் கோவித்துக் கொண்டு வந்து சுற்றித்திரிந்த சிறுவனை போலீசார் மீட்டனர். தஞ்சை ரயில் நிலையத்தில் சிறுவன் ஒருவன் சுற்றிதிரிந்துள்ளான். இதனை பார்த்த ரயில்வே இருப்பு பாதை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், ஜெயக்குமார் மற்றும் போலீசார் சிறுவனை அழைத்தனர். விசாரணையில், காரைக்கால் மாவட்டம் டி.ஆர்.பட்டினத்தை சேர்ந்த அழகர் என்பவரது மகன் பாக்யராஜ் (14). வீட்டில் கோபித்து கொண்டு சிறுவன் வெளியேறியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாக்யராஜை மீட்டு உரிய அறிவுரை வழங்கி அவனது அண்ணன் கோபியிடம் ஒப்படைத்தனர்.

The post தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் சுற்றிதிரிந்த சிறுவன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur railway station ,Thanjavur ,Thanjavur railway ,Tanjore railway station ,Railway Reserve Line Police ,Anbazagan ,Jayakumar ,
× RELATED கரந்தை சி.ஆர்.சி. டெப்போ எதிரில் சாய்ந்து நிற்கும் சிக்னல் விளக்கு கம்பம்