×

வங்கிகள் ரூ.30,896 கோடி கடன் வழங்க இலக்கு

 

விருதுநகர், ஜூன் 28: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 478 வங்கிகள் நடப்பு நிதியாண்டில் ரூ.30,896 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவில் வங்கி மேலாளர்கள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுத்துறை, தனியார் துறை, கிராமப்புற வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்கள் என 478 வங்கிகளுக்கான 2024-25ம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார். அதில் கடன் இலக்கு ரூ30,896.43 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டின் இலக்கை விட ரூ.7,337.72 கோடி அதிகம். விவசாய கடனுக்கு ரூ.10,972.39 கோடி, தொழில் வளர்ச்சிக்கு ரூ.6,106.80 கோடி, கல்விக்கடன் ரூ.50.84 கோடி, வீட்டுக்கடன் ரூ.220.78 கோடி, சமூக கட்டமைப்பு கடன் ரூ.5.69 கோடி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கடன் ரூ.38.36 கோடி, நலிவடைந்தோர் வளர்ச்சி கடன் ரூ.7,221.97 கோடி, பிற முன்னுரிமை கடன் ரூ.235.29 கோடி, மற்ற கடன்களாக ரூ.6,044.31 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கி உதவி பொதுமேலாளர் தர்மராஜ், நபார்டுவங்கி துணை பொதுமேலாளர் ராஜா சுரேஸ்வரன், ஐஓபியின் மண்டல மேலாளர் லஷ்மி நரசிம்மன் உள்பட அனைத்து வங்கியாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வங்கிகள் ரூ.30,896 கோடி கடன் வழங்க இலக்கு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Virudhunagar district ,Virudhunagar Collector ,Collector ,Jayaseelan ,Dinakaran ,
× RELATED விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே...