×

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூலை 2ல் சிறப்பு கிராம சபை கூட்டம்

திண்டுக்கல், ஜூன் 28: திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் 2024- 2025 செயல்படுத்திடும் பொருட்டு 306 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் ஜூலை 2ம் தேதி நடைபெறவுள்ளது என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் 2024- 2025 செயல்படுத்திடும் பொருட்டு 306 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் ஜூலை 2ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

இக்கிராம சபை கூட்டத்தில் கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல் பயனாளிகள் தேர்வு ஒப்புதல் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் 2024-2025 பயனாளிகள் தேர்வு ஒப்புதல் ஆகிய பொருள் குறித்து விவாதிக்கப்படும். எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் 306 கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள், கிராம சபை கூட்டங்களில் தவறாது கலந்து கொண்டு விவாதத்தில் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூலை 2ல் சிறப்பு கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Dindigul district ,Dindigul ,Gram Sabha ,Special Gram Sabha ,Dinakaran ,
× RELATED முறையாக கவனிக்காமல் கைவிட்டுச் சென்ற...