×
Saravana Stores

வல்லநாட்டில் கட்டி முடித்து 6 ஆண்டுகளாக காட்சிப்பொருளான நீர்த்தேக்க தொட்டி

செய்துங்கநல்லூர், ஜூன் 28: வல்லநாடு ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு 6 ஆண்டுகளாக காட்சிப்பொருளாக இருக்கும் சின்டெக்ஸ் நீர்த்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கருங்குளம் யூனியனுக்குட்பட்ட வல்லநாடு ஊராட்சியில் பெருமாள் கோயில் தென்புறம் முகப்பில் கடந்த 2018-19ம் ஆண்டு ₹3 லட்சம் மதிப்பீட்டில் சின்டெக்ஸ் நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு 6 ஆண்டுகளாகியும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளதால் இந்த நீர்த்தேக்க தொட்டி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் மக்கள் பணம் வீணாகுவது மட்டுமின்றி கட்டிடமும் பழுதடைந்து காணப்படுகிறது.மேலும் நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டில் இல்லாமல் இருப்பதால் விஷஜந்துக்களின் புகலிடமாக மாறி விடும் அபாயமும் உள்ளது. எனவே உடனடியாக இந்த நீர்த்தேக்க தொட்டியை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வல்லநாட்டில் கட்டி முடித்து 6 ஆண்டுகளாக காட்சிப்பொருளான நீர்த்தேக்க தொட்டி appeared first on Dinakaran.

Tags : Vallanath ,Karinganallur ,Vallannadu panchayat ,Perumal ,Temple ,Karunkulam Union ,Vallannadu ,Dinakaran ,
× RELATED வாகனம் மோதி வேளாண் கல்லூரி ஊழியர் பலி