×

ம.பியில் பள்ளி பாட புத்தகத்தில் எமர்ஜென்சி குறித்த பாடம்: முதல்வர் மோகன் யாதவ் தகவல்

இம்பால்: நாட்டில் எமர்ஜென்சியின்போது நடந்த அத்துமீறல்கள் மற்றும் அடக்குமுறைகள் குறித்து விளக்கும் வகையில் பள்ளி பாடத்திட்டத்தில் எமர்ஜென்சி குறித்த பாடம் சேர்க்கப்படும் என்று முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். மபி முதல்வர் மோகன் யாதவ் நேற்று கூறுகையில், ‘‘எமர்ஜென்சி காலகட்டத்தில் நடந்த போராட்டத்தை இன்றைய தலைமறையினருக்கு உணர்த்தும் நோக்கத்தில், அப்போது நிலவிய சூழல், அடக்கு முறை மற்றும் அன்றைய காங்கிரஸ் அரசு எடுத்த கடும் நடவடிக்கையை எதிர்த்து லோக் தந்திர போராட்டக்காரர்களின் உறுதிப்பாடு குறித்த பாடம் பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்கப்படும்” என்றார்.

The post ம.பியில் பள்ளி பாட புத்தகத்தில் எமர்ஜென்சி குறித்த பாடம்: முதல்வர் மோகன் யாதவ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mohan Yadav ,Mabi ,
× RELATED வீண் விளம்பரம் தேடுவதிலேயே...