×

டெல்லி அமைச்சர் அடிசி வீடு திரும்பினார்

புதுடெல்லி: டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அடிசி நலம்பெற்று வீடு திரும்பினார். டெல்லியில் தற்போது கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து பாஜ ஆளும் அரியானா மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு தர வேண்டிய நீரை திறந்து விட வலியுறுத்தி கடந்த 21ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். அவரது உடலில் சர்க்கரை அளவு குறைந்ததையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து டெல்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பூரண நலம் பெற்ற அடிசி நேற்று வீடு திரும்பினார்.

The post டெல்லி அமைச்சர் அடிசி வீடு திரும்பினார் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Minister ,Addisi ,New Delhi ,Water Resources ,Adisi ,BJP government ,Ariana ,Delhi Minister ,
× RELATED காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட...