×

மருத்துவமனையில் இருந்து அத்வானி டிஸ்சார்ஜ்

புதுடெல்லி: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாஜ முதுபெரும் தலைவர் எல்.கே.அத்வானி நேற்று வீடு திரும்பினார். முன்னாள் துணை பிரதமரும் பாஜவின் முதுபெரும் தலைவருமான அத்வானி (96) சிறுநீரகம் தொடர்பான பிரச்னை காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகவியல் துறை நிபுணர்கள் மற்றும் முதியோர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து, நேற்று காலை அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

The post மருத்துவமனையில் இருந்து அத்வானி டிஸ்சார்ஜ் appeared first on Dinakaran.

Tags : Advani ,New Delhi ,BJP ,LK Advani ,Former Deputy ,AIIMS Hospital ,Delhi ,Department of urology ,Dinakaran ,
× RELATED டெல்லி அமைச்சர் அடிசி வீடு திரும்பினார்