×

யாரையும், எந்த சமுதாயத்தை பற்றியும் நான் ஒன்றும் குறைவாக பேசவில்லை: அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்

சென்னை: சட்டசபையில் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பேசியதாவது: ரெட்டியார் சமூகத்தைப் பற்றி பேசியதாக சிலபேர் தவறாக எடுத்துக்கொண்டு விட்டார்கள். இந்த அவையில், சாதி, மத பேதங்கள் இல்லை என்று பேசிய நான் எந்த சமூகத்தைப் பற்றியும் குறிப்பாகச் சொல்லவில்லை. பொருளாதார அடிப்படையிலான creamy layer என்றொரு சட்டம் இருக்கிறது. திராவிட இயக்கத்தின் கொள்கையில் creamy layer இல்லை. Creamy layer பற்றி யாரும் பேசக்கூடாது. பொருளாதார ரீதியாக இருந்தால், ரெட்டியார்கள் கொஞ்சம் பொருளாதார ரீதியாக இருந்தால், அவர்களைப் பார்க்கச் சொல்கிறேன் என்று கூறினேனே தவிர, வேறொன்றும் கிடையாது. அதை யாரோ தவறுதலாக, நான் ரெட்டியார் சமூகத்தைப் பற்றி இழிவாகப் பேசிவிட்டதாகச் சொல்லிவிட்டார்கள்.

அப்படி கிடையாது. ஆனால் பொருளாதார ரீதியாக கொடுக்க முடியாது என்றுதான் சொன்னேன். அவர், பிசி கேட்டிருக்கிறார். நம்முடைய வருவாய்த் துறை அமைச்சரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும் ரெட்டியார்களுக்கு பிசி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில், முதல்வரோடு கலந்து பேசி, அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். ஆகவே, யாரையும், எந்த சமுதாயத்தைப் பற்றியும், குறிப்பாக ரெட்டியார் சமுதாயத்தைப் பற்றி நான் ஒன்றும் குறைவாகப் பேசவில்லை. திராவிட இயக்கத்தின் கொள்கை என்பது ஜாதி, சமுதாயமற்றது; யாருடைய மனதையும் புண்படுத்துவது கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.

The post யாரையும், எந்த சமுதாயத்தை பற்றியும் நான் ஒன்றும் குறைவாக பேசவில்லை: அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Rajakannappan ,CHENNAI ,Backward Welfare ,RS Rajakannapan ,Reddyar ,
× RELATED ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட...