×

தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் புத்தாக்க பயிற்சி முகாம்

தென்காசி, ஜூன் 28: தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் ஆய்க்குடி அமர்சேவா சங்கம், மாகாராஷ்டிரா மாநிலத்தின் பயிற்சி நிறுவனம் எல்எம்இடி நிறுவனத்துடன் இணைந்து வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு 4 நாட்களுக்கு ஏற்பாடு செய்திருந்த புத்தாக்க பயிற்சி தொடக்க முகாமிற்கு மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தலைமை வகித்து துவக்கி வைத்தார். விழாவில் மாணவர்கள் கேட்ட போட்டி தேர்வு அனுகுமுறை, ஆட்சியரின் தேர்வுகால பயிற்சி அனுபவம், தென்காசி மாவட்ட வளர்ச்சிக்கான ஆட்சியரின் திட்டம் குறித்த மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றினார். நான்கு நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் இந்திய அளவில் பல்வேறு துறையில் சாதனை புரிந்த மற்றும் அனுபவம் உள்ளவர்கள் வேல்ஸ் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின், அமர்சேவா சங்கத்தின் நிறுவனர் ராமகிருஷ்னன், செயலாளர் சங்கரராமன், எல்ம்இடி பயிற்சி நிறுவனத்தின் நிறுவனர் விரால் மஜீம்தார், பள்ளி தாளாளர் வீரவேல் முருகன், இயக்குநர் ராஜராஜேஸ்வரி, முதல்வர் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் வேல்ஸ் வித்யாலயா பள்ளியின் சார்பில் அமர் சேவா சங்க்கத்திற்கு ஒரு லட்சத்திற்கான நன்கொடை காசோலையை மாவட்ட கலெக்டர் முன்னிலையில் வழங்கப்பட்டது.

The post தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் புத்தாக்க பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Tenkasi Wales Vidyalaya School ,Tenkasi ,Aikkudi Amarseva Sangam ,Wales Vidyalaya School ,LMET ,Maharashtra ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத செயல்கள்; ஒரே நாளில் 102 பேர்...