×

ஐசிஎப் நிறுவனம் இதுவரை 75 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை


சென்னை: ஐசிஎப் நிறுவனம் இதுவரை 75 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து ஐசிஎப் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்: ரயில் பெட்டி தயாரிப்பில் உலகளவில் சிறந்து விளங்கும் ஐசிஎப் நிறுவனம் கடந்த 1955ம் தொடங்கப்பட்டது. வந்தே பாரத், கதி சக்தி உட்பட இந்தியாவில் பயன்படுத்தப்படும் ரயில்களுக்கான பெட்டிகள் மட்டுமின்றி தான்சானியா, அங்கோலா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஐசிஎப் நிறுவனம் ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்கியுள்ளது. மற்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் ரயில் பெட்டிகளை காட்டிலும் ஐசிஎப்பில் தயாரிக்கப்படும் ரயில்பெட்டிகளின் விலை குறைவாக இருப்பதால் 15க்கும் மேற்ப்பட்ட நாடுகள் ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் ஐசிஎப் நிறுவனத்தில் 70 ஆயிரமாவது ரயில் பெட்டி கடந்த 2022ம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாக ஐசிஎப் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கடந்த ஒன்றைய ஆண்டுகளுக்குள் 5 ஆயிரம் ரயில் பெட்டிகளை தயாரித்த நிலையில் 75 ஆயிரம் ரயில் பெட்டிகள் ஐசிஎப் நிர்வாகம் சார்பில் தயாரித்து சாதனை படைத்துள்ளது. ஆரம்ப காலத்தில் 74 பெட்டிகள் தயாரிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆண்டுக்கு குறைந்தபட்சம் 3 ஆயிரம் பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது. அதில் வெளிநாடுகளுக்கு 875 ெபட்டிகள் ெவளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று ஐசிஎப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post ஐசிஎப் நிறுவனம் இதுவரை 75 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை appeared first on Dinakaran.

Tags : ICF ,CHENNAI ,Vande Bharat ,Kathi ,Dinakaran ,
× RELATED சென்னை – நாகர்கோவில் இடையே வந்தே பாரத்...