×

மலிவு விலையில் மருந்துகள் விற்பனை சேவை விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு


ெசன்னை: பொதுமக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் விற்பனை சேவை விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவித்துள்ளார். பேரவையில் கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் வெளியிட்ட அறிவிப்புகள்:

* பொதுமக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் விற்பனை செய்யும் சேவை விரிவுபடுத்தப்படும்.

* கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள வாராக்கடன்களை வசூலிக்கவும் விசாரணையை கண்காணிக்கவும் “இ-தீர்வு” திட்டம் தொடங்கப்படும்.

* கூட்டுறவின் சேவைகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதி மக்களை சென்றடையும் வகையில் 100 இடங்களில் கூட்டுறவுச் சங்கங்களின் கிளைகள் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

The post மலிவு விலையில் மருந்துகள் விற்பனை சேவை விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Jesannai ,Minister ,KR Periyakaruppan ,K.R. Periyakaruppan ,Dinakaran ,
× RELATED அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சிக்கு...