×

கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் முதியவர் சடலமாக மீட்பு

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் முதியவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் பேருந்து நிலையம் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் நள்ளிரவு 2 மணி அளவில் முதியவர் ஒருவர் தலை குப்புற விழுந்தபடி இறந்து கிடப்பதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், கூடுவாஞ்சேரி போலீஸ் எஸ்ஐ மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை மீட்டு உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், மதுரவாயல், எம்எம்டிஏ காலனி, முதல் மெயின் ரோடு, 4வது பிளாக்கை சேர்ந்தவர் சாலமோன் (66) என தெரிய வந்தது. மேலும், முதியவரின் பாக்கெட்டில் இருந்த பணம், ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார் அவர் எதற்காக இங்கு வந்தார்? எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் நள்ளிரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் முதியவர் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Guduvanchery ,Guduvancheri bus station ,Guduvanchery GST Road ,Guduvancheri bus ,
× RELATED ஊரப்பாக்கம்-கூடுவாஞ்சேரி இடையே...