×

திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 15.79 லட்சம் ரேஷன் கார்டுகள் விநியோகம்: பேரவையில் அமைச்சர் தகவல்


சென்னை: திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 15 லட்சத்து 79 ஆயிரத்து 393 ரேசன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. என்று சட்டப் பேரவையில் அமைச்சர் சக்கரபாணி கூறினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்து பேசியதாவது: திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 15 லட்சத்து 79 ஆயிரத்து 393 ரேசன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. பெறப்பட்ட 2 லட்சத்து 92 ஆயிரத்து 43 விண்ணப்பங்களில் 9 ஆயிரத்து 784 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, ஆதார் எண்ணுடன் சரிபார்க்கப்பட்டு ரேசன் அட்டைகள் அச்சிடும் நிலையில் உள்ளன.

மீதமுள்ளவற்றை பரிசீலித்து ஆய்வு செய்து தகுதியுள்ள நபர்களுக்கு ரேசன் அட்டைகள் வழங்கப்படும். பொதுமக்களின் வசதிக்காக நகரங்களில் 1000 ரேசன் அட்டைகளுக்கு மேலும், மற்ற இடங்களில் 800 ரேசன் அட்டைகளுக்கு மேலும் உள்ள ரேசன் கடைகளை படிப்படியாகப் பிரித்துப் புதிய கடைகளை திறந்து வருகிறது. திமுக ஆட்சியில் இதுவரை 699 முழுநேர ரேசன் கடைகளும், 1310 பகுதிநேர ரேசன் கடைகளும் என மொத்தம் 2009 ரேசன் கடைகள் புதி
தாகத் திறக்கப்பட்டுள்ளன.

The post திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 15.79 லட்சம் ரேஷன் கார்டுகள் விநியோகம்: பேரவையில் அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : DMK government ,Chennai ,Minister ,Chakrapani ,Legislative Assembly ,Food and Consumer Protection ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ்...