×

திருவொற்றியூரில் அங்கன்வாடி மைய பணிக்கு அடிக்கல்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம், 13வது வார்டுக்கு உட்பட்ட கிராம தெருவில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் படித்து வருகின்றனர். இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்துள்ளது. இதனால் இங்கு படிக்கும் சிறார்கள் மற்றும் ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். இதனையடுத்து 13வது வார்டு மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.9.95 லட்சம் ஒதுக்கி, அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. கவுன்சிலர் சுசீலாராஜா பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில் வார்டு திமுக செயலாளர் கேபிள் டிவி ராஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அனைத்து வசதிகளுடன் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post திருவொற்றியூரில் அங்கன்வாடி மைய பணிக்கு அடிக்கல் appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Tiruvottiyur ,Tiruvotiyur ,Anganwadi center ,Village Street under Ward 13, Tiruvotiyur Mandal ,Dinakaran ,
× RELATED கால்வாய் அமைக்காததால் திருவொற்றியூர்...