×

மாடு முட்டி காயமடைந்த பெண்ணின் மருத்துவ செலவுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: எம்எல்ஏ வழங்கினார்

திருவொற்றியூர்: மாடு முட்டியதில் படுகாயமடைந்த பெண்ணின் மருத்துவ செலவுக்கு கே.பி.சங்கர் எம்எல்ஏ ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார். திருவொற்றியூர் கிராம தெருவில், கடந்த வாரம் சுற்றி திரிந்த எருமை மாடு ஒன்று அந்த வழியாக நடந்து சென்ற பொதுமக்கள் மீது பாய்ந்தது. இதில், அம்சா தோட்டம் தெருவைச் சேர்ந்த மதுமதி(33) என்பவர் படுகாயமடைந்தார். அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மாடுகளை பாதுகாப்பு இல்லாமல் வெளியே விட்ட அதன் உரிமையாளர் கோடீஸ்வரராவ், அவரது மகன் வெங்கலசாய் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே காயமடைந்து சிகிச்சையில் இருக்கும் மதுமதிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவருக்கு எலும்பு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சிகிச்சையில் இருக்கும் மதுமதி, மருத்துவ செலவிற்கு பணமில்லாமல் சிரமப்பட்டு வருகிறார். இதனால் தனது மருத்துவ செலவிற்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அவர் கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் கே.பி.சங்கர் எம்எல்ஏ, மதுமதியின் மருத்துவ செலவிற்காக ரூ.1 லட்சம் நிதியை அவரது குடும்பத்தாரிடம் நேற்று வழங்கினார்.

The post மாடு முட்டி காயமடைந்த பெண்ணின் மருத்துவ செலவுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Tiruvottiyur ,KP ,Shankar ,
× RELATED திருவொற்றியூர் தொகுதியில் உள்ள...