×

திருவேற்காடு எஸ்.ஏ.கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு யோகா பயிற்சி

திருவள்ளூர்: சென்னை அடுத்த திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித் துறை சார்பில் கல்லூரித் தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா உத்தரவின் பேரில் யோகா பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு கல்லூரி இயக்குநர் சாய் சத்யவதி தலைமை தாங்கினார். முதல்வர் மாலதி செல்வக்குமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் 60 மாணவர்களுக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நோக்கில் பல்வேறு யோகாசனங்கள் மற்றும் சுவாசப் பயிற்சிகளை உடற்கல்வித் துறை இயக்குனர் கு.சிவமாரன் பயிற்றுவித்தார். மாநில யோகா வீராங்கனை பவித்ரா தனிச்சிறந்த ஆசனங்களை செய்து காட்டினார். உடலையும் மனதையும் சம நிலையில் வைக்க உதவும் யோகா அமர்வை தொடர்ந்து மாணவர்களுக்கு மூலிகைத் தேநீர் மற்றும் முளைப்பயறு வழங்கப்பட்டது. வேகமான வாழ்க்கை ஓட்டத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை மாணவர்களுக்குக் கற்பிக்கும் நோக்கில் இந்த யோகா பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வித் துறை உதவி இயக்குனர் ஹரிபாபு செய்திருந்தார்.

The post திருவேற்காடு எஸ்.ஏ.கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு யோகா பயிற்சி appeared first on Dinakaran.

Tags : SA Arts and Science College ,Thiruvekadu ,Tiruvallur ,P.Venkatesh Raja ,Physical Education Department of S.A. College of Arts and Science ,Tiruvekkad ,Chennai ,Sai Satyavathy ,Thiruvekadu S.A. Arts and Science College ,
× RELATED திருவேற்காடு எஸ்.ஏ. கல்லூரியில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு