×

வன்னியர் உள் இடஒதுக்கீடு விரைவில் போராட்டம்: ராமதாஸ் பேட்டி

திண்டிவனம்: வன்னியர் உள் இடஒதுக்கீடு கோரி விரைவில் போராட்டம் நடைபெறும் என ராமதாஸ் கூறினார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த பேட்டி: வன்னியர் உள் இடஒதுக்கீடு வழங்கக் கோரி மாபெரும் போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும். 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் வன்னியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். பொய்யான தகவலை அவர் கூறியுள்ளார். உயர்கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படாமல் இருந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் எடுத்த சாதிவாரி கணக்கெடுப்பு செல்லும் என நீதிமன்றம் சொல்லியுள்ளது. பீகார் மாநிலத்தின் சாதிவாரி கணக்கெடுப்பை எந்த நீதிமன்றமும் தவறு என்று சொல்லவில்லை. கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து பாமக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதில் நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறோம். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாலாற்றின் குறுக்கே எத்தனை அணைகள் வேண்டுமானாலும் கட்டலாம் என்று கூறியது இரு மாநில உறவை கெடுக்கிறது.

22 அணைகள் கட்டிய பின்பு இனி அணை கட்டினால் பாலாறு பாலைவனமாகும். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்பேரவை கூட்டத்தை 100 நாட்கள் நடத்தவேண்டும். நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post வன்னியர் உள் இடஒதுக்கீடு விரைவில் போராட்டம்: ராமதாஸ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Vanniyar ,Ramadoss ,Tindivanam ,Bamaka ,Ramadas ,Thilapuram ,Tindivanam, Villupuram district ,
× RELATED நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு...