×

அசுர வேகத்தில் சென்றபோது கார் பள்ளத்தில் பாய்ந்து விபத்து; போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி: பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

புதுச்சேரி: மரக்காணம் அருகே அசுர வேகத்தில் சென்ற கார் விபத்தில் சிக்கி போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலியானார்கள். இதுதொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக கார் ஒன்று, கடந்த 25ம்தேதி மாலை வேகமாக சென்று கொண்டிருந்தது. அதில், புதுச்சேரி நோணாங்குப்பத்தை சேர்ந்த போலீஸ்காரர் செல்வம் (38), அவரது நண்பர் சாமுவேல் (35), மற்றும் தாய், குழந்தை உள்ளிட்ட 5 பேர் பயணித்தனர். காரை போலீஸ்காரர் செல்வம் ஓட்டிச் சென்றார். மரக்காணம், சூனாம்பேடு பகுதியை கடந்தபோது அங்கு 4 வழிப்பாதை அமைக்கும் பணி நடைபெறுவதை கவனிக்காமல் வேகமாக சென்றுள்ளார்.

இதனால் மாற்று பாதையில் திருப்ப முடியாமல் கார், தடுப்பு மணல் மூட்டைகள் மீது மோதி அருகே இருந்த பள்ளத்திற்குள் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே போலீஸ்காரர் செல்வம் இறந்தார். படுகாயமடைந்த சாமுவேல் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு நள்ளிரவில் இறந்தார். காரில் பயணித்த பெண் உள்பட 2 பேர் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். குழந்தை காயமின்றி தப்பியது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த சூனாம்பேடு போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.

The post அசுர வேகத்தில் சென்றபோது கார் பள்ளத்தில் பாய்ந்து விபத்து; போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி: பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Marakkanam ,Chennai ,East Coast Road ,
× RELATED புதுச்சேரி சுப்பையா சாலையில்...