×

சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி.ந.மகேஸ்வரன் ெவளியிட்ட அறிவிப்பு: சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய (Consultant/Specialist) அலோபதி மருத்துவர்களுக்கு அரிய வாய்ப்பு தற்போது வந்துள்ளது. சவுதி அரேபிய அமைச்சகத்தில் உள்ள இந்த பணிக்கு முதுகலை பட்டம் பெற்ற மருத்துவர்கள் 45 வயது மிகாமல், 2 வருட பணி அனுபவத்துடன் தேவைப்படுகிறார்கள். இந்த பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.

இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.tn.gov.in-ல் தெரிந்து கொள்ளலாம். மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் (வாட்ஸ் அப் நம்பர் 9566239685/6379179200) (044-22505886/044-22502267). அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ, ஏஜென்ட்களோ கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Saudi Arabian Ministry ,Tamil Nadu Govt Information ,CHENNAI ,Overseas Employment Institute of Tamilnadu Government ,C. N. Maheswaran ,of Saudi Arabia ,Saudi Arabian Ministry… ,Tamil Nadu Government ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...