×

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7944 கன அடியாக அதிகரிப்பு

சத்தியமங்கலம்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து 7944 கன அடியாக அதிகரித்து நீர் மட்டம் 60 அடியை எட்டி உள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 622 கன அடியாக இருந்த நிலையில் நேற்று இரவு நீர்வரத்து 6944 கன அடியாக அதிகரித்தது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7944 கன அடியாக உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் அணை நீர்மட்டம் 60.07 அடியாகவும், நீர் இருப்பு 7.2 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 200 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி தண்ணீரும் என மொத்தம் 205 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7944 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Bhavanisagar Dam ,Sathyamangalam ,Erode district ,Dinakaran ,
× RELATED சத்தி அருகே வனப்பகுதியில் டெம்போவில்...