×

தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு: மணிமுத்தாறு அருவியில் குளிக்கத்தடை

அம்பை: நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பிரதான அருவிகளில் ஒன்றாக மணிமுத்தாறு அருவி விளங்குகிறது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவது வழக்கம். இந்நிலையில் மேற்குதொடர்ச்சி மலை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ஆனாலும் நேற்று முன்தினம் மணிமுத்தாறு அருவியில் மிதமாக தண்ணீர் விழுந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று செங்கல்தேரி, மாஞ்சோலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர். எனினும் அருவியை பார்வையிட அனுமதி வழங்கியுள்ளது. அருவியில் நீர்வரத்து குறைந்தவுடன் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

The post தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு: மணிமுத்தாறு அருவியில் குளிக்கத்தடை appeared first on Dinakaran.

Tags : Manimutthar Falls ,Ambai ,Manimuthar falls ,Western Ghats ,Nellai district ,Tamil Nadu ,Manimutthar ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினம் என்பதால் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்