×

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ரஷ்யாவில் ரயில் தடம் புரண்டு விபத்து: 70 பயணிகள் படுகாயம்

மாஸ்கோ: ரஷ்யாவின் வடமேற்கு கோமி பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், திடீரென தடம் புரண்டது. கிட்டத்தட்ட 9 பெட்டிகள் தடம் புரண்டதால், 70 பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. மீட்பு குழு மற்றும் மருத்துவ குழுக்களை சேர்ந்தவர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக விபத்து நடத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சுமார் 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வோர்குடாவிலிருந்து நோவோரோசிஸ்க் கருங்கடல் துறைமுகத்திற்கு ரயில் சென்று கொண்டிருந்த போது விபத்து நடந்துள்ளது. விபத்துக்கான மீட்புப் பணிகள் நடக்கின்றன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.

The post தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ரஷ்யாவில் ரயில் தடம் புரண்டு விபத்து: 70 பயணிகள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Russia ,Moscow ,northwestern Komi region ,Dinakaran ,
× RELATED ரஷ்யாவில் தேவாலயங்களை குறிவைத்து...