×

பாஜக ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசர நிலை.. நீட்டை திரும்பப் பெறும் நிலை பாஜகவுக்கு ஏற்படும்: திருச்சி சிவா பேட்டி

டெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசர நிலை இருந்தது என்று திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார். டெல்லியில் திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது;

பாஜக ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசர நிலை: திருச்சி சிவா
கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசர நிலை இருந்தது. அவசர நிலை பற்றி பேச பாஜகவுக்கு தார்மீக தகுதி இல்லை என்று திருச்சி சிவா காட்டமாக தெரிவித்தார்.

நீட்டை திரும்பப் பெறும் நிலை பாஜகவுக்கு ஏற்படும்: திருச்சி சிவா
நீட் தேவையில்லை என்பதற்கு நியாயமான காரணங்களை முன்வைத்து திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. நீட் தேர்வு முறையாக நடைபெறவில்லை என்பதை பல மாநிலங்கள் தற்போது உணர்ந்து வருகின்றன. நீட் தேர்வை திரும்பப் பெறும் நிலைக்கு ஒன்றிய அரசு தள்ளப்படும் என்று அவர் கூறினார். மேலும், நீட் தேர்வே தேவை இல்லை என்பதுதான் நமது நிலைப்பாடு; அந்த முடிவுக்கு மற்ற மாநிலங்களும் விரைவில் வரும். பெரும்பான்மை பெற்ற அரசு என்று ஜனாதிபதி உரையில் வாசித்தபோது அடக்கமுடியாத சிரிப்பு ஏற்பட்டது. குடியரசுத் தலைவர் உரையில் மணிப்பூர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இடம்பெறவில்லை என்று திருச்சி சிவா கூறினார்.

The post பாஜக ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசர நிலை.. நீட்டை திரும்பப் பெறும் நிலை பாஜகவுக்கு ஏற்படும்: திருச்சி சிவா பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Trichy Siva ,Delhi ,DMK ,DMK Rajya Sabha Committee ,President ,Dinakaran ,
× RELATED தாமரை சின்னத்துக்கு தடை கோரிய மனுவை...