×

அரியானாவில் ஐ.சி.யூ.வில் நோயாளி வயிற்றிலேயே பலமாக குத்திய ஊழியர்: சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸ் விசாரணை

அரியானா: அரியானாவில் அவசர சிகிச் சை பிரிவில்அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியின் வயிற்றில் ஆண் மருத்துவ பணியாளர் ஒருவர் பலமாக குத்துவது போன்ற சிசிடிவி காட்சிகல் வெளியாகியுள்ளன. அரியானாவின் இசார் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் ஐ.சி.யூ.வில் நோயாளி ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

அப்போது உள்ளே வந்த ஆண் மருத்துவ பணியாளர் ஒருவர் மற்ற நோயாளிகளுக்கு தெரியாத வகையில் திரைசீலையை மூடிவிட்டு அந்த நோயாளியின் வயிற்றிலேயே பலமாக குத்தினார். தனது தந்தையை பணயக்கைதி போல் பிடித்து வைத்து அடித்து மிரட்டியதாக மருத்துவமனை ஊழியர்கள் மீது அவரது மகன் புகாரளித்தார். இதன் பேரில் 3 பேருக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கட்சி அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.

The post அரியானாவில் ஐ.சி.யூ.வில் நோயாளி வயிற்றிலேயே பலமாக குத்திய ஊழியர்: சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Ariana. ,Will ,Ariana ,Izhar district ,Ariana. C. U. ,C. ,Dinakaran ,
× RELATED அமெரிக்க விபத்தில் காயமடைந்த அரியானா...