- யூரோ கால்பந்து தொடர்
- ஜோர்ஜியா
- போர்ச்சுகல்
- கெல்சென்கிர்சென்
- 2024 யூரோ கோப்பை கால்பந்து தொடர்
- தின மலர்
கெல்சென்கிர்சென்: 2024ம் ஆண்டு யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இன்றுடன் லீக் போட்டிகள் முடிவடையும் நிலையில், நள்ளிரவு 12.30க்கு 2 போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் எப் பிரிவில் உள்ள போர்ச்சுகல் – ஜார்ஜியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 2வது நிமிடத்தில் ஜார்ஜியாவின் வரத்ஸ்கெலியா கோல் அடித்தார். ஆட்டத்தின் 2வது பாதியில் மிக்காவ்தட்சே லாவகமாக கோல் அடிக்க ஜார்ஜியா அணியின் கோல் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது. இறுதிவரை போர்ச்சுகல் அணி வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்காததால் 2-0 என்ற கோல் கணக்கில் ஜார்ஜியா வென்றது. இதுபோல் எப் பிரிவில் உள்ள துருக்கி – செக் குடியரசு அணிகள் இடையே மற்றொரு ஆட்டம் நடந்தது.
ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் ஒழுங்கீனமாக நடந்த கொண்டதற்காக செக் குடியரசின் ஆண்டொனின் பராக்கிற்கு நடுவர் ரெட் கார்டு வழங்கினார். இதனால் 10 வீரர்களுடன் மட்டுமே ஆட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால் அது செக் குடியரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனிடையே ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் துருக்கியும் 66வது நிமிடத்தில் செக் குடியரசும் தலா ஒரு கோல் அடித்தன. அதன் பிறகு கூடுதல் நேரத்தில் துருக்கியின் சென்க் டோசன் கோல் அடிக்க 2-1 என்ற கணக்கில் செக் குடியரசை வீழ்த்தி துருக்கி வெற்றி பெற்றது. ஆட்டம் முடிந்த பின்னர் துருக்கி வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செக் குடியரசு வீரர் தாமஸ் சோரிக்கு போட்டி நடுவர் இஸ்த்வான் கோவாக்ஸ் ரெட் கார்டு வழங்கியது மைதானத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
The post யூரோ கால்பந்து தொடர்: போர்ச்சுகலை வீழ்த்தியது ஜார்ஜியா appeared first on Dinakaran.