×

காலணியில் மறைத்து கடத்திய 2.2 கிலோ கொக்கைன் பறிமுதல்: கென்யா நாட்டு பெண்ணை கைது செய்து அதிகாரிகள் விசாரணை

சென்னை: நைஜீரியாவிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்திவரப்பட்ட 22 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருளை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் இளம்பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். கத்தார் தலைநகர் தோகாவிலிருந்து நேற்று இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் சுற்றுலா விசாவில் நைஜீரியாவிலிருந்து தோகா வழியாக சென்னை வந்த 30 வயது பெண்ணை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது அவரது காலணியிலிருந்த ரகசிய பகுதிகளில் போதை பொருளை மறைத்து கடத்தியது கண்டறியப்பட்டது. அவரது பைக்குள் இருந்த மேலும் 5 ஜோடி காலணிகளை சோதனையிட்டதில் அவற்றிலும் போதை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். சர்வதேச சந்தையில் 22 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.2 கிலோ கொக்கைன் போதை பொருள்களை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் யாருக்காக அவர் கடத்தலில் ஈடுபட்டார். கடத்தல் கும்பலுடனான தொடர்பு குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post காலணியில் மறைத்து கடத்திய 2.2 கிலோ கொக்கைன் பறிமுதல்: கென்யா நாட்டு பெண்ணை கைது செய்து அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nigeria ,Indigo Airlines ,Doha ,
× RELATED நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு...