×

நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்றி; அரசியல் சாசனம் இடம் பெறவேண்டும்: சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரி வலியுறுத்தல்

டெல்லி: நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும். அதற்கு பதிலாக அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும் என சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரி வலியுறுத்தியுள்ளார். 18வது மக்களவை தேர்தல் முடிந்து பிரதமர் மோடி 3வது முறையாக பதவியேற்றுள்ளார். நேற்று நடந்த சபாநாயகர் தேர்தலில் 2வது முறையாக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். சமாஜ்வாதி கட்சி எம்.பி., ஆர்.கே.சவுத்ரி, லோக்சபாவில் வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியதாவது; சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில்; அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல. முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழ்வது செங்கோல். செங்கோலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும். இவ்வாறு ஆர்.கே.சவுத்ரி கூறினார். அவரது கருத்தில் எந்த தவறும் இல்லை எனக் கூறியுள்ள காங்கிரஸ், செங்கோலை அகற்றுவது தொடர்பான சவுத்ரியின் கருத்தை ஆதரித்துள்ளது. இந்நிலையில், செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாதி எம்.பி., சவுத்ரி விடுத்த கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்தார்.

 

 

The post நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்றி; அரசியல் சாசனம் இடம் பெறவேண்டும்: சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Samajwati M. B. R. K. Chaudhry ,Delhi ,Samajwadi ,B. R. K. Choudhry ,Modi ,18th Lok Sabha elections ,Mongol ,Parliament ,Samajwati M. B. R. K. Choudhry ,
× RELATED நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை...