×

காஞ்சிபுரம் அருகே நாய் கடித்து 5 வயது சிறுவன் காயம்: சிறுவனுக்கு மருத்துவனையில் சிகிச்சை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே நாய் கடித்து 5 வயது சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே கணபதிபுரம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவரின் 5 வயது மகன் நிர்மல்ராஜ். இவர் வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளியில் விளையாடி கொண்டிருந்தபோது அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று சிறுவனை கடிக்க முயன்றுள்ளது. நொடி பொழுதில் தெருநாய் சிறுவனின் வாய் பகுதியை கடித்து குதறியது.

இதனால் சிறுவனின் வாய் பகுதியில் பலத்த காயமானது ஏற்பட்டது. சிறுவன் நிர்மல்ராஜின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பாலாஜி நாயிடம் இருந்து சிறுவனை மீட்கும் பொழுது பாலாஜிக்கு நாய் கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக சிறுவனை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

The post காஞ்சிபுரம் அருகே நாய் கடித்து 5 வயது சிறுவன் காயம்: சிறுவனுக்கு மருத்துவனையில் சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Nirmalraj ,Balaji ,Ganapathipuram ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் விற்பனை செய்தால்...