×
Saravana Stores

கர்நாடகா, கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: கேஆர்எஸ், கபினி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அம்மாநிலத்தில் உள்ள அணைகளில் நீர் வரத்து மளமளவென அதிகரித்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குடகு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை கோடி வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள கேஆர்எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று இந்த அணையின் நீர்வரத்து வினாடிக்கு 2241கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை 3856 கன அடியாக உயர்ந்துள்ளது.

இதனிடையே கேரள மாநிலம் வயநாட்டிலும் கடந்த 3 நாட்களாக கனமழை கோடி வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தின் கபினி அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 6000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 16,977கன அடியாக அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒரே நாளில் கபினி அணையின் நீர்மட்டம் 3 அடி அளவிற்கு உயர்ந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு வென உயர்ந்து வருகிறது.

The post கர்நாடகா, கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: கேஆர்எஸ், கபினி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Kerala ,KRS ,Kabini dams ,Ammannitsa ,Kudaku district ,Karnataka, Kerala ,Kabini ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட...