×

நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவைக்கேற்ப நகராட்சியாகவோ, மாநகராட்சியாகவோ தரம் உயர்த்தலாம் என சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது என அமைச்சர் கே.என்.நேரு சட்டமன்றத்தில் கூறியுள்ளார். தற்போதுள்ள விதிகளின்படி புதிய நகராட்சி, மாநகராட்சிகளை மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் மட்டுமே உருவாக்க முடியும். மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையிலான நடைமுறையை மாற்ற சட்டத் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

The post நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு appeared first on Dinakaran.

Tags : Minister ,KN Nehru ,CHENNAI ,K.N. Nehru ,Minister KN Nehru ,
× RELATED 20 நாளுக்குள் 4 மாவட்டங்கள்...