×

அரசு போக்குவரத்து கழகத்தில் போதைப் பொருள் தடுப்பு: சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

திருச்சி. ஜூன் 27: திருச்சி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்(லிட்) திருச்சி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் சட்ட விரோதக் கடத்தலுக்கு எதிரான உறுதிமொழியினை கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மகேந்திர குமார் தலைமையில் அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மண்டல பொது மேலாளர் முத்துகிருஷ்ணன், பொது மேலாளர்( தொழில்நுட்பம் கூட்டாண்மை ) நாசர், துணைமேலாளர் (தொழில்நுட்பம்) கார்த்திகேயன், துணை மேலாளர் (பயிற்சி) சங்கர், துணை மேலாளர் வணிகம் (பொறுப்பு ) புகழேந்தி, போக்குவரத்து கழக பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

The post அரசு போக்குவரத்து கழகத்தில் போதைப் பொருள் தடுப்பு: சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : State Transport Corporation ,Trichy ,Trichy Tamil Nadu State Transport Corporation ,Kumbakonam ,Litd ,Trichy State Transport Corporation Zonal Office ,International Day against ,Narcotics Prevention and Illicit Trafficking ,Narcotics ,Government Transport Corporation ,Dinakaran ,
× RELATED சென்னையில் 2-ம் கட்டமாக கூடுதலாக 500...