×

விராலிமலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

விராலிமலை, ஜூன் 27: விராலிமலை அருகே கணவன் இறந்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விராலிமலை அருகே உள்ள சரளபட்டியைச் சேர்ந்தவர் ஏழுமலை மனைவி அஞ்சுகா தேவி(35). கடந்த 15 வருடங்களுக்கு முன் திருமணம் ஆன இவர்களுக்கு ஒரு ஆண்,பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 6 வருடங்களுக்கு முன் அஞ்சுகா தேவியின் கணவர் ஏழுமலை இறந்துவிட்டார். அது முதல் விரக்தியில் இருந்து வந்த அஞ்சுகா தேவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது சேலையால் வீட்டின் உத்திரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அஞ்சுகா தேவி சகோதரர் சின்னையா(45) விராலிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post விராலிமலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Viralimalai ,Anjuka Devi ,Yehumalai ,Charalapatti ,
× RELATED திறன் வளர்ப்பு பயிற்சி நடத்த வேண்டும்...