×

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு: பெரம்பலூர் கலெக்டர் தகவல்

பெரம்பலூர், ஜூன் 27: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை யின் கீழ் ஆலத்தூர் தாலுக்கா, நத்தக்காடு அரசு ஆதிதிராவிடர் நல மேல் நிலைப் பள்ளியில் பொரு ளியல், வரலாறு, கணிதவி யல் ஆகிய 3- முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை தொகுப் பூதியத்தில் தற்காலிகமாக பணிபுரிய தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது. தற்காலிக முது கலைப் பட்டதாரி ஆசிரியர் களுக்கான விண்ணப்பப் படிவம் இன்று (27ம்தேதி) முதல் ஜூலை மாதம் 5ம் தேதி பிற்பகல் 2 மணி வரை பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வழங்கப்படும். விண்ணப்பதாரர்களிடம் இருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியா கவோ,அஞ்சல் மூலமா கவோ, உரிய கல்வித்தகுதி சான்று நகல்களுடன் பெரம்பலூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் வளாகம், பெரம்ப லூர் 621212 என்ற முகவ ரிக்கு நேரிலோ அல் லது தபால் மூலமாகவோ அனுப்பலாம்.

மேற்கண்ட காலிப் பணியிடத்தில் முதுகலை பட்டப்படிப்பு (M.A., & M.Sc.,) மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு B.Ed., முடித்திருத்தல் வேண்டும். தற்காலிக முது கலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.18,000 ஊதியமாக நியமிக்கப்பட்டுள்ளது. தற்காலிக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களை இன்று (27ம்தேதி) முதல் வரும் ஜூலை மாதம் 5ம்தேதி பிற்பகல் 04மணிக்குள் பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக் கப்பட வேண்டும். மேற்கண்ட தற்காலிக ஆசிரியர்கள் பதவிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவ ருக்கு முன்னுரிமை வழங் கப்படும். ஒன்றுக்கு மேற் பட்ட தகுதி வாய்ந்த பணி நாடுநர்கள் முதுகலை பட்ட தாரி ஆசிரியர் நிலையில் இருப்பின்ஆசிரியர் தகுதித் தேர்வு (TRB) தேர்ச்சி பெற்ற வர்களுக்கும், அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னார்வலர்களுக்கு முன் னுரிமை வழங்கப்படும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் காலிப்பணியிடங்களாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர பணியாளர்களை கொண்டு நிரப்பிடும் வரை தகுதி பெற்ற பணி நாடுநர்களைக் கொண்டு சம்பந்தப் பட்ட பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள அனுமதி க்கப்படுகிறது. நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு காலிப்பணியி டம் நிரப்பப்படும் நாள் முதல்பள்ளி மேலாண்மைக் குழு மூலம் பணியமர்த்தப் பட்ட தற்காலிக தொகுப்பூதிய பணியாளர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பணியில் நியமனம் செய்யப்ப டும் நாள்முதல் ஏப்ரல்-2025 முடிய உள்ள மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக பள்ளி மேலாண்மைக்குழு மூலம் பணியமர்த்தப்படும். மேலும், கூடுதல் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கீழ் தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவ லகத்தினை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

The post முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு: பெரம்பலூர் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Perambalur Collector ,Perambalur ,Perambalur District ,Collector ,Karpagam ,Adithravidar Health Higher Secondary School ,Nathakkad ,Aladhur Taluk ,Adi Dravidar Welfare Department ,Dinakaran ,
× RELATED நீராதாரங்களாக விளங்கும் ஆறுகளில்...