×

சிறப்பு மனுநீதி நாள் முகாமில் ₹1.52 கோடியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார் ஏரிகுத்தி ஊராட்சியில் நடந்த

பேரணம்பட்டு, ஜூன் 27: பேரணாம்பட்டு அருகே ஏரி குத்தி ஊராட்சியில் நடந்த சிறப்பு மனு நீதி நாள் முகாமில் சிறப்பு மனுநீதிநாள் முகாமில் ₹1.52 கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ஏரி குத்தி ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கி 183 பயனாளிகளுக்கு சுமார் ₹1.52 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளான தையல் இயந்திரம், இலவச வீட்டுமனை பட்டாக்கள், இஸ்திரி பெட்டிகள் போன்ற உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் சுபலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சீதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், வட்டாட்சியர் விநாயகர் மூர்த்தி, ஒன்றிய பெருந்தலைவர் சித்ரா ஜனார்த்தனன், பேரணாம்பட்டு நகர மன்ற தலைவர் பிரேமா, துணைத் தலைவர் ஆலியார் ஜூபேர் அஹ்மத், ஊராட்சி மன்ற தலைவர் தேவி சோக்கன், துணை தலைவர் ராஷிதா உபேதா, ஒன்றிய குழு உறுப்பினர்கள், சாவித்திரி ரவி, சுலைமான்,கோபி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து பேரணாம்பட்டு நகர்ப்புற பகுதிகளில் உள்ள வளர்ச்சி பணிகளான பிரதம மந்திரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹1.52 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தையும் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் பேரணாம்பட்டு நகர்புற பகுதிகளில் 17 கான்கிரீட் சாலைகள் சீரமைத்து மேற்கொள்ளப்பட்ட பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

The post சிறப்பு மனுநீதி நாள் முகாமில் ₹1.52 கோடியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார் ஏரிகுத்தி ஊராட்சியில் நடந்த appeared first on Dinakaran.

Tags : Special ,Justice ,Day ,Camp ,Collector of Welfare Grants ,Erikuthi Uratchi ,RALLY ,SPECIAL PETITION JUSTICE ,LAKE PUNDI NEAR RALANAMPATU ,Vellore ,Lake Gudhi Uradachi ,Special Justice Day Camp ,Welfare Grants ,Dinakaran ,
× RELATED நடுவனேரியில் இன்று சிறப்பு மனுநீதி முகாம்