×

நடுவனேரியில் இன்று சிறப்பு மனுநீதி முகாம்

இளம்பிள்ளை, ஜூன் 27: மகுடஞ்சாவடி அருகே, நடுவனேரி ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் (வேம்படிதாளம் துணை மின் நிலையம் அருகில்) சிறப்பு மனுநீதி முகாம், இன்று (27ம் தேதி) காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த முகாமில், கலெக்டர் பிருந்தாதேவி கலந்து கொண்டு, மனுக்களை பெற்று, நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். மேலும், முகாமில் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு வருவாய் துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.

The post நடுவனேரியில் இன்று சிறப்பு மனுநீதி முகாம் appeared first on Dinakaran.

Tags : Special Human Justice Camp ,Madhuneri ,Yumupillai ,Vembadithalam ,Madhuneri Panchayat ,Makudanchavadi ,Special human justice ,
× RELATED ராஜீவ்காந்தி நினைவு தினம்