×

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

நாமக்கல், ஜூன் 27: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை (28ம்தேதி) காலை 11 மணிக்கு கலெக்டர் உமா தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம் என கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

The post விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Farmers Grievance Meeting ,Namakkal ,Farmers' Grievance Day ,Uma ,Grievance ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் 28ம் தேதி நடக்கிறது