×

போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு

போச்சம்பள்ளி, ஜூன் 27: மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் வாசுதேவன் தலைமை வகித்தார். எஸ்ஐக்கள் மனோகரன், கௌதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கலந்து கொண்டு பேசுகையில், ‘கள்ளச்சாராயம் மற்றும் குட்கா, ஹான்ஸ், பான்பராக் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். யாரேனும் போதை பொருட்கள் விற்பது தெரிந்தால் மாணவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விற்பனை செய்பவர்கள் மீது, கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். மத்தூர் பகுதியை கள்ளச்சாராயம் இல்லாத பகுதியாக உருவாக்க வேண்டும்,’ என்றார். நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Bochambally ,Mathur Government ,Boys Higher Secondary School ,Principal ,Vasudevan ,SIs Manokaran ,Gautham ,Inspector ,Balamurugan ,Dinakaran ,
× RELATED மாணவர்களுக்கு இலவச பாடபுத்தகம் விநியோகம்