×

விவசாயியை தாக்கியவர் கைது ; 2 பேர் மீது வழக்கு

கடத்தூர், ஜூன் 27: கடத்தூர் அருகே, தேக்கல்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (35), விவசாயி. கடந்த 24ம் தேதி, ஊர்கவுண்டர் ஜெயராமன், ஹரி ஆகியோரை அழைத்துக் கொண்டு, அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினர் முனுசாமி என்பவரின் நிலத்தை அளவீடு செய்து கொண்டிருந்தனர்.அப்போது இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் எஸ்வந்த், முனுசாமி(63), மேச்சேரி (47) ஆகியோர் கோவிந்தசாமியை தகாத வார்த்தையில் திட்டினர். தகராறு அடிதடியாக மாறியது. அப்போது எஸ்வந்த், கையில் வைத்திருந்த கடப்பாரையால் கோவிந்தசாமியை தலையில் பலமாக தாக்கினார். இதில் காயமடைந்த கோவிந்தசாமியை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து கோவிந்தசாமி அளித்த புகாரின் பேரில், போலீசார் எஸ்வந்த்ைத(29) கைது செய்து, முனுசாமி, மேச்சேரி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post விவசாயியை தாக்கியவர் கைது ; 2 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Kadoor ,Govindaswamy ,Thekalnayakanpatti ,Jayaraman ,Hari ,Munusamy ,Dinakaran ,
× RELATED கடத்தூரில் பாமக ஆலோசனை கூட்டம்