×

டம்டம்பாறை அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் படுகாயம்

தேவதானப்பட்டி, ஜூன் 27: டம்டம்பாறை அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் காயமடைந்தனர். தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி பள்ளிவாசல்தெருவைச் சேர்ந்த சிலர் நேற்று காலை வேனில் கொடைக்கானலுக்கு திருமணநிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். பின்னர் திருமணநிகழ்ச்சி முடிந்து மாலை வேனில் பொம்மிநாயக்கன்பட்டிக்கு வந்து கொண்டிருந்தனர். தேவதானப்பட்டி காட்ரோடு அருகே உள்ள டம்டம்பாறை என்ற இடத்தில் வரும் போது கொண்டை ஊசி வளைவில் வேன் பிரேக் பிடிக்காமல் சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஜாபர்(28), ஜாவீத்(22), அசார்(27), நாகராஜன்(25), உமர்(27), ஆரிப்(25), சையதுஅபுதாஹிர்(22) உள்பட 17 பேர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற தேவதானப்பட்டி போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மாலை நேரம் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தேவதானப்பட்டி போலீசார் போக்குவரத்தை சரிசெய்து, விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post டம்டம்பாறை அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Damdamparai ,Devadanapatti ,Pomminayakkanpatti Pallivasaltheru ,Kodaikanal ,Pomminayakanpatti ,
× RELATED தேவதானப்பட்டி பகுதியில் தென்னை...