×

வாலிபரின் மண்டையை உடைத்த 5 பேருக்கு வலை

போடி, ஜூன் 27: தேனி மாவட்டம் போடி அருகே தேவாரம் அய்யப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரவேல் மகன் சரவணக்குமார்(30). இவர் தனது பாட்டி இறந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க போடி பெரியாண்டவர் சாலையில் உள்ள முனிசிபல் காலனிக்கு வந்தார். இறுதி சடங்கு செய்யும்போது சரவணக்குமாருக்கும், போடி முனிசிபல் காலனியை சேர்ந்த உறவினர் முருகன், சந்தோஷ் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் முருகன், சந்தோஷ் மற்றும் மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்த வடிவேல், சாமிகண்ணு, புதுப்பட்டியை சேர்ந்த ஆண்டவர் ஆகியோர் சரவணகுமாரை கருங்கற்களால் தாக்கியதில் அவரது மண்டை உடைந்தது. அவரை உறவினர்கள் மீட்டு மேல் சிகிச்சைக்காக தேனி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் போடி நகர் போலீசார் முருகன் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

The post வாலிபரின் மண்டையை உடைத்த 5 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Bodi ,Saravanakumar ,Devaram Ayyappan temple street ,Bodi, Theni district ,Periyandavar Road ,
× RELATED தோட்ட பணியாளரை தாக்கியவர்கள் மீது வழக்கு