×

மறியலில் ஈடுபட்ட 25 பேர் மீது வழக்கு

தர்மபுரி, ஜூன் 27: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே ஜடையம்பட்டி பகுதியில், குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இதனால் குடிநீர் கேட்டு அப்பகுதியை சேர்ந்த மக்கள், தர்மபுரி செல்லும் சாலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மொரப்பூர் போலீசார் விசாரணை நடத்தி, சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், போக்குவரத்திற்கு இடையூறாக போராட்டத்தில் ஈடுபட்டதாக 25 பேர் மீது மொரப்பூர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

The post மறியலில் ஈடுபட்ட 25 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Jadayampatti ,Morapur, Dharmapuri district ,Morapur ,Dinakaran ,
× RELATED செல்போன் திருடிய வாலிபர் கைது