×

அழகப்பா பல்கலை. கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை: துணைவேந்தர் வழங்கினார்

காரைக்குடி, ஜூன் 27: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் இணைப்பு கல்லூரி ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடந்தது. 3 நாட்கள் நடந்த கிரிக்கெட் போட்டியில் 11 அணிகள் கலந்து கொண்டன. நாக்அவுட் முறையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் அழகப்பா பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டம் பெற்றது. கீழக்கரை, செய்யது ஹமீதியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி 2ம் இடம், தேவகோட்டை  சேவுகன் அண்ணாமலை கல்லூரி அணி 3ம் இடம் பெற்றது.

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழாவிற்கு சின்டிகேட் உறுப்பினர், கிரிக்கெட் அணி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெ.ஜெயகாந்தன் வரவேற்றார். பதிவாளர் செந்தில்ராஜன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுந்தர் சிறப்புரையாற்றினார். வெற்றி பெற்ற அணிகளுக்கு பேராசிரியர் ஜி.ரவி கோப்பை வழங்கினார். உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் முரளிராஜன், பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் நாகராஜன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

The post அழகப்பா பல்கலை. கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை: துணைவேந்தர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Alagappa University ,Karaikudi ,Karaikudi Alagappa University ,Dinakaran ,
× RELATED அழகப்பா பல்கலை சின்டிகேட் உறுப்பினர்கள் நியமனம்