×

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

மேல்மலையனூர், ஜூன் 27: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்ற திருத்தலமாகும். இத்திருத்தலத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற அம்மனுக்கு காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவைகளை உண்டியலில் செலுத்தி செல்கின்றனர். அவ்வாறு பக்தர்கள் வேண்டுதலுக்காக உண்டியலில் செலுத்தியிருந்த காணிக்கைகளை என்னும் பணி கோயில் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.74 லட்சத்து 17 ஆயிரத்து 570 ரொக்கமும், 243 கிராம் தங்க நகைகளும், 1505 கிராம் வெள்ளிப் பொருட்கள், வெளிநாட்டு நாணயங்கள் உள்ளிட்டவைகளை செலுத்தியிருந்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் திருக்கோயில் உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சுரேஷ், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், மேலாளர் மணி, காசாளர் சதீஷ் மற்றும் உண்டியல் கணக்கிடும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். உண்டியல் எண்ணும் பணி கோயில் நிர்வாகம் சார்பில் வீடியோ பதிவு செய்யப்பட்டது. மேலும் பாதுகாப்பு பணியில் வளத்தி காவல் நிலைய போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

The post மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி appeared first on Dinakaran.

Tags : Melamalayanur Angalamman temple ,Melmalayanur ,Villupuram District ,Melmalayanur Angalamman Temple ,Sami ,
× RELATED சினிமா தயாரிப்பாளர் கொலை வழக்கு:...