×

நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு

மதுரை, ஜூன் 27: மதுரை விரகனூர் ரிங்ரோடு சந்திப்பில் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கில், அரசுத் தரப்பில் பதிலளிக்குமாறு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஐகோர்ட் பதிவாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு: மதுரை விரகனூர் ரிங்ரோடு சந்திப்பு பகுதியில் நீர், நிலைகள் உள்ளன. இவற்றை சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. எனவே, இப்பகுதியில் தனி நபர்களுக்கு வழங்கிய பட்டாக்களை ரத்து செய்யவேண்டும். நீர்நிலைகளை பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும்.

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் கூடாது என ஏற்கனவே ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே விரகனூர் ரிங்ரோடு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும், ஆக்கிரமிப்புக்கு துணைபோன அதிகாாிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை நேற்ற விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் மனுவிற்கு அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தனர்.

The post நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Viraganoor Ring Road ,Madurai ICourt ,Dinakaran ,
× RELATED மதுரை கோரிப்பாளையம் பகுதியில் சோதனை...