×

கொடைக்கானலில் சிக்னல் கம்பம் சாய்ந்து பலியானவருக்கு நிதியுதவி

கொடைக்கானல், ஜூன் 27: கொடைக்கானலில் நேற்று காலை சூறைக்காற்றுடன் பெய்த மழையின் காரணமாக பஸ் நிலையம் அருகே போக்குவரத்து சிக்னல் கம்பம் திடீரென்று சரிந்து விழுந்தது. இதில் கொடைக்கானல் அன்னை தெரசா நகரை சேர்ந்த தாஸ் (56), சின்னப்பள்ளம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (28) ஆகியோர் சிக்கி படுகாயமடைந்தனர். இதில் தாஸ் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட பழநி தொகுதி எம்எல்ஏ ஐ.பி.செந்தில் குமார் பலியான தாஸின் குடும்பத்திற்கு உடனடியாக ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் இறந்த தாஸின் குடும்பத்திற்கு எம்எல்ஏ சார்பிலான நிதி உதவியை வழங்கினர். மேலும் சிகிச்சையில் உள்ள சுரேஷிற்கும் நிதி உதவி வழங்கப்பட்டது.

The post கொடைக்கானலில் சிக்னல் கம்பம் சாய்ந்து பலியானவருக்கு நிதியுதவி appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Das ,Kodaikanal Mother Teresa ,Chinnapallam ,
× RELATED கொடைக்கானலில் ஒரே இடத்தில்...