×

தோட்டக்கலை சார்ந்த திட்டங்களை பெற கிராமங்களில் நாளை சிறப்பு முகாம்

உடுமலை, ஜூன் 27: மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மடத்துக்குளம் வட்டாரத்தில் தோட்டக்கலைத் துறை சார்ந்த பல்வேறு திட்டங்கள் மத்திய மாநில அரசுகளின் பங்களிப்போடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, 2024 25ம் நிதியாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பாப்பான் குளம், கொழுமம் வருவாய் கிராமங்களில் 80 சதவீதம் அதிகமான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த, வருவாய் கிராமத்தில் உள்ள விவசாயிகள் பயன் பெறும் வகையிலும் திட்டங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடையும் வகையிலும் அந்தந்த கிராமங்களில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் சிறப்பு முகாம் நாளை (28-ம்தேதி) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது.

தானியங்கி சொட்டு நீர் கருவி, ஆழ்துளை கிணறு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் விவசாயிகள் பதிவு செய்து பயன்பெறலாம்,இந்த, திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் நகலை மட்டும் கொண்டு வந்து கொடுத்து பாப்பான்குளம், கொழுமம் கிராம ஊராட்சி அலுவலகத்தில் நடைபெறும் தோட்டக்கலைதுறை சிறப்பு முகாமில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், உள் ஒதுக்கீடாக அனைத்து திட்டங்களிலும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு உள்ளது. எனவே, ஆதிதிராவிடர் விவசாயிகள் அனைத்து திட்டங்களிலும் இணைந்து பயன்பெறலாம். நேரில் வர இயலாத விவசாயிகள் உங்கள் பகுதி உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தாமோதரனை 96598 38787 என்ற எண்ணிலும், நித்யராஜை 63821 29721 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், விவரங்களை பெற மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். எனவே விவசாயிகள் குறிப்பாக பாப்பான்குளம், கொழுமத்தை சேர்ந்த விவசாயிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு தேவைப்படும் திட்டங்களை பதிவு செய்து பயன்பெறலாம்.மேலும் முகாமில் கலந்துகொள்ளும் விவசாயிகளுக்கு ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு குறிப்பாக கொடி தக்காளி சாகுபடியில் தொழில்நுட்ப சாகுபடி பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post தோட்டக்கலை சார்ந்த திட்டங்களை பெற கிராமங்களில் நாளை சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Madathikulam district ,Suresh Kumar ,
× RELATED உடுமலை பகுதியில் கள்ள சாராயம்...