×

ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கிய ஊராட்சி தலைவர் புதிய கட்டிடத்தில் கூடலூர் நகர மன்ற கூட்டம்

கூடலூர், ஜூன் 27: கூடலூர் நகர மன்ற கூட்டத்தில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.ராசாவின் வெற்றிக்கும் தமிழகம், புதுச்சேரியில் 40க்கு 40 எம்பிக்கள் வெற்றி பெற பாடுபட்ட தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தும் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. கூடலூர் நகராட்சியின் மாதாந்திர நகர் மன்றக்கூட்டம் தலைவர் பரிமளா தலைமையில் புதிய கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் புதிய அலுவலக கட்டடத்தின் மேல் தளத்தில் அமைந்துள்ள புதிய மன்ற கூட்ட அரங்கில் நேற்று முதல் முறையாக துவங்கி நடத்தப்பட்டது. துணை தலைவர் சிவராஜ், ஆணையர் பொறுப்பு ஏகராஜ், பொறியாளர் சாந்தி, சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், ஓவர்சீர் பிரதீப், வட்டார சுகாதார அலுவலர் கதிரவன் மற்றும் மன்ற உறுப்பினர்கள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற ஆ.ராசாவுக்கும், தமிழ்நாட்டில் 40 க்கும் 40 தொகுதிகளை வென்று வரலாற்று சாதனை படைத்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து கூட்டத்தில் தண்ணீர் பிரச்னை மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டது. கூட்டத்தில் வட்டார சுகாதார அலுவலர் கதிரவன் பேசுகையில், டெங்கு பரவுவதற்கு முக்கிய காரணம் தண்ணீர். அதுவும் பொதுமக்கள் குடிநீரை தேக்கி வைக்கும் தொட்டிகள் முறையாக பராமரிக்காவிட்டால் அந்த தண்ணீரில் டெங்கு கொசு உருவாகும்.

தண்ணீரை பல நாட்கள் தேக்கி வைக்கும் போது கொசுக்கள் முட்டை இடுவதற்கு வசதியாக ஆகிவிடும். எனவே பொதுமக்கள் அதிக நாட்கள் தண்ணீரை தேக்கி வைக்காமல் இருக்க மூன்று நாட்களுக்கு ஒரு ஒருமுறையாவது தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் டெங்கு கொசுக்கள் உருவாகாமல் அளவில் தடுக்க முடியும். மேலும் நகராட்சியும் சுகாதார பணிகள் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும் என கேட்டுக் கொண்டார். தொடர்ந்து கூடலூரில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை சரியான முறையில் தீர்த்து வைக்க வேண்டும் என அனைத்து கவுன்சிலர்களும் கோரிக்கை விடுத்தனர். மேலும் பல்வேறு பணிகள் குறித்து விவாதங்கள் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கிய ஊராட்சி தலைவர் புதிய கட்டிடத்தில் கூடலூர் நகர மன்ற கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Panchayat ,Jamabandhi ,Gudalur City Council ,Kudalur ,R. Raza ,Tamil ,Nadu ,Chief Minister ,Tamil Nadu ,Puducherry ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் ஜமாபந்தி நிறைவு நாளில் 133...