×

மது விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 6 பேர் கைது

ஈரோடு, ஜூன் 27: சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க ஈரோடு மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்தியூர், சித்தோடு, கவுந்தப்பாடி, நம்பியூர், கோபி மற்றும் ஆசனூர் போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் நேற்று முன் தினம் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்துவந்த அந்தியூர், செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்த ஆண்டியப்பன் (64),

சூரியம்பாளையத்தை சேர்ந்த லோகனாதன் (41), கவுந்தப்பாடி அருகில் உள்ள தர்மாபுரியை சேர்ந்த முருகேசன் (37), நம்பியூர், ஏ.டி.காலனியை சேர்ந்த வேலுசாமி (28) கோபி, நஞ்சகவுண்டன்பாளையம், ஹரிஜன் காலனியைச் சேர்ந்த பழனியம்மாள் (52), சத்தியமங்கலம், அரேபாளையத்தை சேர்ந்த நடராஜன் (45) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 29 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

The post மது விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,district police ,Anthiyur ,Chithod ,Kaunthappadi ,Nambiur ,Gopi ,Asanur Police ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலத்தில் காவல்துறை சார்பில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்